காதலர் தின கொண்டாட்டமாக, வரும் 13ஆம் தேதியே தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தாலும் வழக்கமான அவரது ஆக்சன் பாணியில் இருந்து விலகி காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் ‘அனேகடு’ என்கிற பெயரில் ரிலீஸாக இருக்கிறது.
‘வேலையில்லா பட்டதாரி’யின் தெலுங்கு பதிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் ஆந்திராவில் வெளியான ‘ரகுவரன் பி.டெக்’ படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளதால், சந்தோஷத்தில் இருக்கும் தனுஷ், ‘அனேகன்’ தெலுங்கு வெர்ஷன் புரமொஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கான இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அது மட்டுமல்ல, தெலுங்கு சேனல் ஒன்றில் நாகார்ஜுனா நடத்தும் ‘மீலோ எவரு கோடீஸ்வரரு’ என்கிற க்விஸ் நிகழ்ச்சியில் தனுஷ், கே.வி.ஆனந்த் இருவரும் கலந்துகொண்டு ‘அனேகன்’ படத்தை புரமோட் செய்கிறார்கள்.
Comments are closed.