பவர்ஸ்டார் பேச்சுக்கு டி.சிவா கண்டனம்..!

273

 

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தை இயக்கிய யுரேகா இயக்கியுள்ள மூன்றாவது படம் தான் தொப்பி.. பழங்குடியினரின் மறைக்கப்பட்ட வரலாற்றை படமாக்கியுள்ளார் யுரேகா. முயல்’ முரளி, சண்டியர் புகழ் ரக்சா நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது சில தயாரிப்பாளர்கள் நடித்தபின் சொன்னபடி சம்பளம் தராமல் ஏமாற்றிவிடுகிறார்கள்.. இனி படம் தயாரிக்க வருபவர்களை தயாரிப்பாளர் சங்கத்தில் இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் கட்டச்சொல்லிவிட்டு படம் எடுக்கும்படி சொல்லவேண்டும்” என தன பாணியில் நையாண்டியுடன் சொன்னார். பார்வையாளர்கள் மத்தியில் அவர் பேச்சுக்கும் க்ளாப்ஸ் அமோகமாகத்தான் விழுந்தது.

ஆனால் அவரது பேச்சு, விழாவிற்கு வருகை தந்திருந்த நகைச்சுவை நடிகர் சிங்கம் புலி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பி.எல்.தேனப்பன் உட்பட பலரை கோபம் கொள்ளவைத்துவிட்டது. இதற்கு சிங்கம் புலி தனது பேச்சில் கண்டனம் தெரிவித்தார்.. பவர்ஸ்டார் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை..மீண்டும் எழுந்து ‘பணம் இல்லாதவர்கள் எதற்கு படம் தயாரிக்க வரணும்.. ஏதாவது ஹோட்டல் வச்சு நடத்திட்டு போகலாமே” என பதிலளித்தார்.

அடுத்து பேசவந்த டி.சிவா எடுத்த எடுப்பிலேயே பவர்ஸ்டாருக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.. “பொதுமேடைகளில் எப்படி பேசுவது என முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.. இன்று நீங்கள் இந்த அளவு வளர்ந்ததற்கு ஒரு தயாரிப்பாளர்தான் காரணம். இதுவே இப்படி தரமற்று நீங்கள் பேசுவது கடைசி தடவையாக இருக்கட்டும்” என டி.சிவா பேச, அடுத்து வந்த தேனப்பன், மன்னன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

Comments are closed.