சம்மர் ட்ரீட்டாக வெளியாகும் ஜோதிகா படம்..!

222

 

ஜோதிகா நடிக்கும் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ ரீமேக்கின் கடைசி நாள் படப்பிடிப்பை சோழிங்கநல்லூரில் நடத்தி, பூசணி உடைத்து 46 நாட்கள் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.. ஜோதிகாவின் ஆல்டைம் பேவரைட்டான சவீதா தான் அவருக்கு டப்பிங் பேசிவருகிறார்.

ஜோதிகா ரீ-என்ட்ரி ஆகும் படம் என்பதும், இதில் அவருக்கு லைப்டைம் கேரக்டர் என்பதும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றன. ஜோதிகாவின் கணவராக ரகுமானும் தோழியாக அபிராமியும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படம் மார்ச் அல்லது ஏப்ரலில் சம்மர் ட்ரீட்டாக வெளியாக இருக்கிறது.

Comments are closed.