ரஜினியிடம் சிவாஜி புத்தகத்தை பரிசளித்த ஒய்.ஜி.மகேந்திரன்..!

216

 

நடிகர் திலகம் சிவாஜியுடனான தனது அனுபவங்களை ‘நான் சுவாசிக்கும் சிவாஜி’ என்கிற தலைப்பில், வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி வந்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். வாசகர்களிடம், குறிப்பாக சிவாஜி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த தொடரை, அப்படியே அதே பெயரிலேயே புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.

தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் வைத்து சமீபத்தில் தான், இந்த நூலை நடிகை லட்சுமியின் கையால் வெளியிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன். மேலும் சிவாஜியை தனது கலைத்தந்தையாக நினைக்கும் ரஜினிக்கு, இந்த நூலின் ஒரு பிரதியை அவரது வீட்டிற்கே நேரில் சென்று ரஜினியிடம் பரிசாக வழங்கினார் ஒய்.ஜி.மகேந்திரன்.

Comments are closed.