“திருக்குறள் இனி ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும்”- பரத்வாஜ் பெருமிதம்..!

224

 

எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கும் திரையுலகில் ஒரு இடைவெளி விழுவது சகஜம்தான். அது அவர்களின் திறமை குறைந்துவிட்டது என்பதால் அல்ல.. அவர்களது பயணம் இன்னொரு பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அந்தவகையில் சினிமாவிலிருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தாலும் இசையமைப்பாளர் பரத்வாஜ் தற்போது செய்திருக்கும் செயல் நிச்சயமாக அனைவரும் போற்றவேண்டிய ஒரு சாதனைதான். தனக்கு கிடைத்த இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் தனது இசையால் பாடலாக்கி இருக்கிறார் பரத்வாஜ்.

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளுக்கு மூன்று விதமாக இசையமைத்து இருக்கிறார். இதற்காக உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழில் பாடத்தெரிந்த பிரபலங்கள் பலரையும் பாட வைத்திருப்பதுதான் தனிச்சிறப்பு..

“எந்த தலைமுறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. அதை வெறும் வார்த்தையால் சொல்வதைவிட, இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். திருவள்ளுவர் தினமான ஜனவரி 17ஆம் தேதி அன்று திருக்குறளின் முதல் பாலான அறத்துப்பாலை மட்டும் முதலில் வெளியிட இருக்கிறேன்” என்கிறார் பரத்வாஜ்.

Comments are closed.