
‘சேது’ மூலம் விக்ரம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த கதை தான் இங்கே பலருக்கு தெரியும்.. ஆனால் அதற்கு முன் தமிழில் ஒரு ஸ்திரமான இடம் கிடைக்காமல் போராடியபோது, அவருக்கு கை கொடுத்தது மலையாள திரையுலகம் தான் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.. அந்தசமயத்தில் கிட்டத்தட்ட பத்து மலையாள படங்களில் நடித்தார்..
தமிழில் பிஸியான பின்னர், மலையாளத்தில் கவனம் செலுத்தமுடியாத விக்ரம், இப்போது மீண்டும் மலையாளத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற ‘ஐ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தன் ஆசையை தெரிவித்துள்ளார் விக்ரம்.
அதிலும் குறிப்பாக, மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான ‘ஆடு ஜீவிதம்’ நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறியுள்ளார். அந்த நாவலை பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி படமாக இயக்கவிருப்பதாகவும் அதில் மோகன்லால் அல்லது பிருத்விராஜ் நடிக்கக்கூடும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் விக்ரமின் இந்த அறிவிப்பு அதில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்துமா என பார்க்கலாம்.
Comments are closed.