
இன்றைய தேதியில் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவிலான சினிமாவுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அவரால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி, ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்றபடி இசையமைத்து, அவர்களை உற்சாகத்தில் ஆடவைப்பவர் என்றால் அது நிச்சயமாக ஹாரிஸ் ஜெயராஜ் தான்.
முதல் படத்தின் இசை மூலம் கவனம் ஈர்ப்பவர்கள் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார்கள் என்பதை இளையராஜா (அன்னக்கிளி), ரஹ்மான்(ரோஜா) ஆகியோருக்கு பிறகு ‘மின்னலே’ படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்தவர் ஹாரிஸ் தான். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே இசையமைத்தாலும் அதில் தன் முத்திரையை ஆழமாக பதித்துவிடுவார் ஹாரிஸ்.
இந்த வருடத்தில் இவரது இசையமைப்பில் முதல் படமாக அஜித் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ ஜன-29ல் வெளியாக இருக்கிறது.. இன்று பிறந்தநாள் காணும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
Comments are closed.