விக்ரம் பிரபு நடித்த ‘அரிமாநம்பி’ படத்தில் பலம் வாய்ந்த மந்திரியை சாதாரண இளைஞன் எதிர்க்கும் வழக்கமான ஆக்ஷன் கதைக்கு இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து விறுவிறுப்பு காட்டியிருந்தார்இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.
இப்படி ஒரு லைன் கிடைத்தால் விடுவார்களா தெலுங்கு சினிமாகாரர்கள்.. இந்தப்படத்தின் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய இயக்குனர் தேவ கட்டா தற்போது விஷ்ணுமஞ்சுவை ஹீரோவாக வைத்து இந்தப்படத்தை தெலுங்கில் இயக்கிவருகிறார்.
அரிமா நம்பியில் கதாநாயகியான பிரியா ஆனந்திற்கு நடிப்பதற்கு நிறையவே ஸ்கோப் இருந்தது.. அத்துடன் படமும் வெற்றியடைந்து பிரியாவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது. தற்போது தெலுங்கு ரீமேக்கில் பிரியா ஆனந்தின் கேரக்டரில் சகுனி நாயகியான பிரணீதா நடிக்கிறார்.
Comments are closed.