தான் இதுவரை நடித்திராத கேரக்டர்கள் ஏதேனும் சிக்குமா என எப்போதும் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருப்பார் மம்முட்டி. அப்படி ஒரு கேரக்டரும் அதற்கேற்ற கதையும் அமைந்தால் அது புது இயக்குனராக இருந்தால் கூட உடனே ஒகே சொல்லிவிடுவார்.. தற்போது அவர் நடித்துவரும் தீயணைப்பு வீரர் கேரக்டர்கூட அப்படி கிடைத்தது தான்.
இயக்குனர் தீபு கருணாகரன் இயக்கும் ‘பயர்மேன்’ படத்தில்தான் மம்முட்டி முதன்முறையாக தீயணைப்பு வீரர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்காக தொடர்ந்து 3௦ நாட்கள் கால்ஷீட் கொடுத்த மம்முட்டி, பல நேரங்களில் தீயின் வெப்பத்திலும் புகையிலும் சிக்கினாராம். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அபாரமான உழைப்பை தந்துள்ளாராம்.
Comments are closed.