படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சொல்லும் ஒரே வார்த்தை ‘மொக்க படம்’.. ஆனால் அதையே இப்போது ஒரு படத்திற்கு டைட்டிலாக வைத்து படத்தையும் முடித்துவிட்டார்கள்.. ஆம்… படத்தின் பெயரே ‘மொக்க படம்’ தான். ஆர்ட் டைரக்டராக இருந்து ஹீரோவக மாறிய வீரசமர் தான் இந்தப்படத்தின் கதாநாயகன்.
‘வீரசேகரன்’ படத்தில் அமலாபாலுடன் ஜோடியாக நடித்த இவர், இந்தப்படத்தில் அமிர்தாவுடன் ஜோடியாக நடிக்கிறார். விஜய் டிவி புகழ் நடிகர் மா.கா.பா.ஆனந்த் முதன் முதலாக காதலர்களுக்கு டிப்ஸ் தரும் விதமாக“லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க” என்ற பாடலை வல்லவன் இசையில் பாடி இருக்கிறார்.
Comments are closed.