ஆர்யா தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘மீகாமன்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தைதயாரித்துள்ளது.
இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Comments are closed.