ஆரம்பித்தது ‘நானும் ரவுடி தான்’ ஷூட்டிங்..!

211


போடாபோடி’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கம் ‘நானும் ரவுடி தான்’. படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்..! ஹீரோ நம்ம விஜய்சேதுபதி தான்.. ஹீரோயின் விஜய் சேதுபதி கடத்த விரும்புவதாக சொன்னாரே அந்த நயன்தாராவே தான். நயன்தாரா நடித்த ‘ராஜாராணி’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் தான் இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிவிட்டது. இதுபற்றி தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தனுஷுடன் ‘புதுப்பேட்டை’யில் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய்சேதுபதி-தனுஷ் நட்பு இதன் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

Comments are closed.