
தமிழ் சினிமாவை சர்வதேச உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை பல இயக்குநர்களுக்கு உண்டு. அதில் குறிப்பிடத் தகுந்தவர் ருத்ரைய்யா. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த வர நேற்று காலமானார்.
‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைத்து, புதிய திரைமொழியை எழுதியவர் ருத்ரையா. பல்வேறு தளங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
சூப்பர் ஸ்டார்கள் என்ற அடையாளம் இல்லாத நேரத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்து 1978-ல் வெளியான அற்புதமான படங்களில் ஒன்று. ஒரு நடிகையாக ஸ்ரீபிரியாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்ததும் இந்தப் படத்தில்தான். ரஜினியும் கமலும் இன்று கூட தங்களது சிறந்தபடங்களில் ஒன்றாக இதை கூறுவது உண்டு.
கமல் எப்போதும் போற்றும் இடத்தில் வைத்திருந்த இயக்குனரான ருத்ரையா இயக்கியது சில படங்களே ஆனாலும் காலத்தால் அழியாத புகழை பெற்றவர் ஆவார்.
Comments are closed.