“நனையாத மழையே’ விழாவுக்கு நனைந்துகொண்டே வந்தேன்” – புலமைப்பித்தன் ருசிகர பேச்சு..!

210

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘நனையாத மழையே’. இந்தப்படத்தை மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். மெலடி மெட்டுக்களுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் சௌந்தர்யன் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில் இசையமைத்திருக்கிறார். நேற்று மாலை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மூத்த கவிஞர்களான புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டு கவி நடையில் சுவராஸ்யமான விஷயங்களை பேச இந்த விழாவே ஒரு கவியரங்கமாக மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டது..

அதிலும் புலவர் புலமைப்பித்தன் பேசும்போது, “நனையாத மழையே விழாவுக்காக மயிலாப்பூரில் இருந்து நனைந்துகொண்டே வந்தேன்” என கூறி அரங்கத்தை அதிர வைத்தார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் பாடல் எழுதுகிறேன் என கவிஞர்களின் வாய்ப்புகளை பறிக்கும் செயலை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆர்.சுந்தர்ராஜன் பேசியபோது, “இனிவரும் இசைவெளியீட்டு விழாக்களில் இது போன்ற கவிஞர்களை முன்னிலைப்படுத்துங்கள்.. இது அவர்களுக்கான மேடை” என உற்சாகப்படுத்தினார். மேலும் இந்த விழாவில் இயக்குனர்கள் கானா பாலா, பட்டியல் சேகர், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Comments are closed.