
சொந்த கதையா அல்லது ரீமேக் கதையா என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சொன்ன கதையை, சொன்ன நாட்களில், சொன்ன பட்ஜெட்டில் அப்படியே இம்மி பிசகாமல் படம் எடுப்பவர் இயக்குனர் ஆர்.கண்ணன்.. அதனாலேயே இவரது படங்கள் எல்லாமே எந்த ஒரு பிரச்சனையுமின்றி சொன்ன தேதியில் வெளியாகியும் வந்திருக்கின்றன.
இப்போது விமல், பிரியா ஆனந்த், சூரி ஆகியோரை வைத்து கண்ணன் இயக்கியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படம் காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில மாற்றங்கள் காரணமாக வரும் நவம்பர்-7ல் இந்தப்படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘நாடோடிகள்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
Comments are closed.