
சித்தர்களும் யோகிகளும் தன்னை தரிசிக்க வருபவர்களிடம் பெரும்பாலும் சொல்ளும் வார்த்தை ‘உன்னை அறிந்துகொள்” என்பதுதான். எனக்குத்தான் பெயர், விலாசம் இருக்கிறதே என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது. உனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்துகொள் என்பதுதான் அதன் அர்த்தம். சரி என்னை அறிந்தால்..? என கேள்வி முளைக்கிறதா?
கேட்பதற்கு சற்று புரியாததுபோல இருக்கும் இந்த வார்த்தை ஒரு மாஸ் ஹீரோ படத்தின் டைட்டிலாக மாறினால் அடுத்த நொடியே அகில உலக கவனம் பெற்று விடுகிறதே..! யெஸ்.. கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் நடித்துவரும் படத்துக்கு சூட்டப்பட இருக்கும் பெயர் தான் ‘என்னை அறிந்தால்’..
பல தலைப்புகளை பரிசீலித்து இறுதியாக இந்த தலைப்பை கேட்டதும் அஜித்துக்கு இதுதான் சரியான டைட்டில் என தோன்றியுள்ளது. எப்படியோ ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களே.. அது போதும்…
Comments are closed.