ஸ்ரீதிவ்யாவுடன் ஜி.வி.பிரகாஷ் ஜப்பான் பயணம்…!

227

ஒரு நாயகன் உதயமாகிறான் என்பது போல இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் ‘பென்சில்’ படம் மூலமாக கதாநாயகனாகவும் மாறிவிட்டார். மணி நாகராஜ் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட எண்பது சதவீதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கின்றன.

கவிஞர் தாமரை எழுதியுள்ள அந்தப்பாடல்களை படமாக்குவதற்காக ஜி.வி,பிரகாஷ் மற்றும் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவுடன் ஜப்பான் கிளம்புகிறது ‘பென்சில்’ படக்குழு. எப்படியும் இந்த வருட இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்துவிடவேண்டும் என திட்டமிட்டு பரபரப்பாக வேலை செய்து வருகிறாராம் இயக்குனர் மணி நாகராஜ்…

Comments are closed.