“தனுஷுடன் நூறு படங்களில் பணிபுரிய ஆசை” – கே.வி.ஆனந்த்

179

தனுஷின் முகராசி என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் எல்லாருமே மீண்டும் அவரை வைத்து இயக்க விருப்பம் தெரிவிப்பதை பின்னே என்னவென்று சொல்வதாம்.

இயக்குனர் வெற்றிமாறன், சுராஜ், பூபதி பாண்டியன் ஆகியோர் தனுஷை வைத்து இரண்டுபடங்களையும், மித்ரன் ஜவஹர் மூன்று படங்களையும் இயக்கியுள்ளனர். ஆனால் இயக்குனர் கே.வி.ஆனந்த் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய்விட்டார்.

தற்போது தனுஷை வைத்து ‘அநேகன்’ படத்தை இயக்கிவரும் கே.வி.ஆனந்த் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டார். இந்தப்படத்தில் தனுஷ் கொடுத்த பாரமான ஒத்துழைப்பை கண்டு அசந்துபோன கே.வி.ஆனந்த் “தனுஷுடன் சேர்ந்து நூறு படங்களில் பணிபுரிய ஆசையாக இருக்கிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.