லிங்கா படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியிடம் ஆசி வாங்கிய கன்னட நடிகர்..!

228

 

கன்னடத்தில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் ராகவேந்திரா. மறைந்த கன்னட திரையுலகின் பிதாமகன் நடிகர்  ராஜ்குமாரின் உறவினரும் கூட. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாகவும் 25 படங்கள் நடித்துவிட்டார்.

தற்போது ‘கிஸ்மத்’ படம் மூலம் ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ராகவேந்திரா, சமீபத்தில் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சூப்பர் ஸ்டார்  ரஜினியை தனது மனைவி குழந்தையுடன் சந்தித்தார்.

அவர் இயக்குனராகவும் மாறியுள்ளதை அறிந்த ரஜினி, அவரை வாழ்த்தி ஆசி வழங்கினார். மேலும் அவரிடம் கடந்த முறை பார்த்தபோது இருந்ததைவிட உடல் எடையை குறைத்திருக்கிறீர்களே என்று ஞாபகமாகவும் கேட்டாராம். ரஜினி அவரை பார்த்தது 2007ல் விஜய்ராகவேந்திரா திருமணம் நடந்தபோது தான். ஏழு வருடம் கழிந்தாலும் கூட சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஒரு ஞாபக சக்தி..!

Comments are closed.