பிலிம் பேக்டரி to மியூசிக் பேக்டரி.. அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் விஷால்.. !

180


 ஒரு நடிகராக மட்டுமே நின்று விடுவது விஷாலின் நோக்கமல்ல.. காரணம் ஒரு தயாரிப்பாளரின் குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர். தான் நடிக்கும் படம் ரிலீஸ் சமயத்தில் வேறு காரணங்களால் நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான், தானே சொந்தமாக படம் தயாரிப்பதற்காக ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற கம்பெனியை தொடங்கினார்.

‘மதகஜ ராஜா’ படம் தந்த அனுபவத்தால் தான் ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ என தன படங்களை தானே தயாரித்து அவற்றை வெற்றிகரமாக வெளியிட்டுவிட்டு, இப்போது ஹரி டைரக்ஷனில் தான் நடித்துவரும் ‘பூஜை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

தற்போது இன்னொரு புதிய முயற்சியாக ‘v-மியூசிக்’ என்கிற ஆடியோ வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார் விஷால்.. தற்போது, தான் நடித்து, யுவன் இசையமைத்துள்ள ‘பூஜை’ படத்தின் பாடல்களையே தனது புதிய நிறுவனத்தின் முதல் வெளியீடாக வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளாராம் விஷால்.

Comments are closed.