
‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார் சீனுராமசாமி. ஆனால் முப்பது படங்களை இயக்கியவர்போல ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.
தேசியவிருது பெற்ற இயக்குனரான இவர் தற்போது தனது மூன்றாவது படமாக ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
இந்தமுறை இசைக்காக சீனுராமசாமி கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். அதைவிட சுவாரஸ்யமான விஷயம் யுவன் இசையில் வைரமுத்து முதன்முதலாக பாடல் எழுதியிருப்பதுதான். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது..
Comments are closed.