கிரேட் ஆர்யா..! கிரேட்டஸ்ட் விஜய் சேதுபதி..!!

177

முன்னணி நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போவது ஒரு படத்திற்கு எப்படி பூஸ்ட் தருகிறதோ, அதேபோலத்தான் பிரபல நடிகர்கள் நட்புக்காக தங்களுக்கு வேண்டியவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பதும்.. இரண்டுமே படத்தின் பப்ளிசிட்டிக்கும் வியாபாரத்துக்கும் ரொம்பவே உதவியாக இருக்கும்.

அந்தவகையில் முன்னணியில் இருக்கும் கதாநாயகன் ஆர்யாவும் வளர்ந்து முன்னணி கதாநாயகனாக மாறிவரும் விஜய்சேதுபதியும் நேசக்கரம் நீட்டுவதில் போட்டிபோடுகிறாகள். நேற்று நடைபெற்ற ‘நம்பியார்’ படத்தின் இசைவெளியீட்டு விசாவில் தான் அந்தப்படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று தெரிந்தது.(ஆர்யாவும் ஸ்ரீகாந்த்தும் ஸ்கூல்மேட்ஸ் பாஸ்).

அதேபோல இன்று நடைபெற்ற ‘திருடன் போலீஸ்’ இசைவெளியீட்டு விழாவில் திரையிட்டுக் காட்டப்பட்ட பாடல் ஒன்றில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்டிருப்பதை பார்த்ததும் ஆடியன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி. ஆமாங்க இந்தப்படத்தில் நட்புக்காக ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருக்கிறார் விஜய்சேதுபதி.

இதேபோலத்தான் இவர்கள் இருவரும் பார்த்திபன் இயக்கிவரும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆட லட்சங்களிலும், ஏன் கோடிகளில் கூட காசு வாங்கும் நிலையில், அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் நட்புக்காக இலவசமாகவே நடித்து தருகிறாகள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

Comments are closed.