தமிழில் ‘ஷட்டர்’ திறக்கிறார் விஜய்..!

252


கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘ஷட்டர்’. மலையாள இயக்குனர் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன், லால், வினை போர்ட் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள்.

ஒரு ஷட்டர் மூடிய கடையை வைத்தே இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருந்தார் ஜாய் தாமஸ். இந்தப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழில் ரீமேக் செய்யப்போகிறார் என ஜாய் தாமஸ் தகவல் ஒன்றை வெளியிட அதனை ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.

இந்தப்படத்தை தனது நிறுவனம் சார்பாக தயாரிக்கும் எண்ணத்தில் மட்டுமே இருப்பதாகவும் படத்தை வேறொரு இயக்குனர் தான் இயக்குவார் என்றும் சொல்லியுள்ளாராம். ஆனாலும் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றும் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் விஜய்.

Comments are closed.