இரு மொழிகளில் தயாரான ‘கார்த்திகேயன்’ இசை வெளியானது..!

230


சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து ‘கார்த்திகேயன்’ என்ற படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்து. இந்தப்படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்கிறார். இவர் தமிழுக்குத்தான் புதியவரே தவிர தெலுங்கில் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்துவிட்டார்.

மேலும் ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் இருவரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க, ‘பண்ணையாரும் பத்மினியும்’ துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சேகர் சந்திரா இசையமைத்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஜெயம் ராஜா, அவரது தந்தை எடிட்டர் மோகன், மற்றும் இயக்குனர் மாதேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்கள்.

Comments are closed.