
வழக்கமாக காதலனும் காதலியும் சேருவதற்குதான் பெரிய போராட்டமே நடக்கும். ஆனால், ஒரு அம்மாவும் அவரது மகனும் சேருவதற்கு காதலி படும் பாட்டை பார்த்திருக்கிறீர்களா..? அதுதான் ‘எவன்’ படத்தின் கதைக்களம்” என்கிறார் இயக்குனர் துரைமுருகன்.
இவர் கருப்பசாமி குத்தகைகாரர், கோலி சோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
இப்படத்தின் ஹீரோ திலீபன் புகழேந்தி ஒரு இருசக்கர வாகன விளையாட்டு வீரர்.
அப்புறம் சொல்லவா வேண்டும்.. படத்தில் வரும் ஒரு சேசிங் காட்சியில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்களை எந்த வித டூப்பும் இல்லாமல் தானாகவே நடித்து கொடுத்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக தீப்தி நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் கானா பாலாவின் “ச்சீப்போ நாயே, பொறிக்கி தித்திக்கும்” என்ற பாடல் உலகமெங்கும் காதலர்களுக்கு எப்படி காதல் செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்சாகவும், காதலர்களின் காலர் ட்யூனாகவும், குறிப்பாக இந்த வருடத்தின் பட்டிமன்றங்களில் மிக சர்ச்சைக்குரிய பாடலாகவும் கண்டிப்பாக அமையும் என ஆருடம் சொல்கிறார் இசையமைப்பாளர் ஏ.கே.சசிதரன்.
“இந்த படம் காதலிப்பவர்களுக்கும் பிடிக்கும், அம்மாவை பிடிக்கிற எல்லோருக்கும் பிடிக்கும், ஊதாரித்தனமாக ஊரை சுற்றுபவரகளுக்கும் பிடிக்கும்” என்கிறார் இயக்குனர் துரைமுருகன்
Comments are closed.