‘காக்கா முட்டை’,’விசாரணை’,’கொடி’,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மாஸ்க்’. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா சார்லி, ருஹானி ஷர்மா,பால சரவணன் மற்றும் அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.ஆர்.ராமர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.இன்று ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.
Comments are closed.