கபடி ப்ரோ விமர்சனம்

388

நடிகர்கள் : சுஜன், பிரியா லால், சஞ்சய் வெள்ளங்கி, சிங்கம் புலி, மதுசூதனன், அஞ்சலி, சிஸர் மனோகர், ஹானா, சண்முகசுந்தரம், மனோபாலா, ரஜினி.எம்
இசை : ஏ.ஜே.டேனியல்
ஒளிப்பதிவு : இ.கிருஷ்ணசாமி
இயக்கம் :சதீஷ் ஜெயராமன்
தயாரிப்பு : அஞ்சனா சினிமாஸ் – ஜே.டி.சதிஷ் குமார்

தென்காசி பகுதியில் நிகழும் கபடி விளையாட்டு பின்னணியில் நிகழும் சம்பவங்கள் தான் “கபடி புரோ. “அப்பகுதி கபடி வீரன் வீரபாகு. தனது நண்பர்கள் உடன் பாயும் புலி என்ற பெயரில் கபடி அணி வைத்து இருக்கிறான். அதோடு அவ்வப்போது சின்ன சின்ன தில்லு முல்லுகளையும் ஜாலியாக செய்து வருகிறான். அவனுக்கு ஆதரவாக அவனது நண்பர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கபடி வீரன் வீரபாகுவுக்கு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து மகள் அபிராமி (பிரியா லால்) உடன் காதல் மலர்கிறது. வீரபாகு தன் தாய்மாமன் மகளை திருமணம் செய்வான் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் அவன் நண்பன் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து காதலி அபிராமியை மணம் முடிக்க முற்படுகிறான். வீரபாகுவின் தில்லு முல்லுகள் காதலியின் தந்தை இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியனுக்கு தெரியவர அவனை பழிவாங்க துடிக்கிறார். அபிராமியும் அவனை உதறித் தள்ளுகிறாள். ஊரில் நடக்கும் கபடி போட்டியில் பழிவாங்க விரும்புகிறார். ஆனால் வீரபாகு அந்த போட்டியில் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முடிவு செய்கிறான். போட்டியில் வீரபாகு வெற்றி பெறுகிறானா? காதலர்கள் மீண்டும் சேர்கிறார் களா? என்பதுதான் கதை.

வளர்ந்து வரும் இளம் நடிகரான சுஜன் நடிப்பில் மிளிர்கிறார்.கபடி காட்சியில் யதார்த்தம் காட்டியிருக்கிறார்.மற்றொரு கதாநாயகன் சஞ்சய் வெள்ளங்கி தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

சிங்கம்புலியின் காமெடி படத்துக்கு பலம் சேர்க்கிறது. மனோபாலா கல்யாண புரோக்கராக வந்து கலகலப்புட்டுகிறார். இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் பாத்திரத்தில் வரும் மதுசூதன ராவ் படத்துக்கு பலம் சேர்க்கிறார்.

நாயகிகள் பிரியா லால்,ரஜினி கிராமப் பெண்ணாக முத்திரை பதித்துள்ளார்கள். படத்தின் பாடல்கள் எல்லாமே அருமை .பாடலாசிரியர்கள் தாமரை, ஞானகரவேல் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

நடனம் நோபல்,ராதிகா இருவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.இயக்குனர் சதீஷ் ஜெய ராமன் இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை எடுத்து வைத்துள்ளார். கபடி புரோ ஒருமுறை பார்க்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஜே.டேனியலின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் கபடி போட்டிகள் பரபரப்பாகவும், காதல் காட்சிகள் கலர்புல்லாகவும் இருக்கிறது.

ஜாலியான ஒரு காதல் கதையை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சதீஷ் ஜெயராமன். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரையும் சரியாக பயன்படுத்தி திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

காதல் காட்சிகளையும், கபடி போட்டி காட்சிகளையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர், முழு படத்தையும் கமர்ஷியலாக இயக்கி கைதட்டல் பெறுகிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.