ராகவா லாரன்ஸின் தம்பி ஹீரோவாகும் படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

254

raghava-lawrence
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சிறப்பு தோற்றத்தில் நடிக்க அவருடைய தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளது.

Comments are closed.