இயக்குநர் பாலாவுடன் மூன்றாவது முறையாக இணையும் சூர்யா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

230

surya-bf
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே, பாலா இயக்கும் படத்தை தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தில் சூர்யா நடிக்கிறாரா அல்லது வேறு ஹீரோ நடிக்கிறாரா, என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்த நிலையில், இன்று அப்படம் குறித்து சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆம், சூர்யா மூன்றாவது முறையாக இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகர் சூர்யா இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…

என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.