‘இன்ஷா அல்லாஹ்’ விமர்சனம்

193

insha-alla-bf
நடிகர்கள் : கவிஞர் விக்ரமாதித்யன், பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா
இயக்க்ம : சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்
தயாரிப்பு : நேசம் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்

இஸ்லாம் மார்க்கம் வளியுறுத்தும் ஐந்து கடமைகள், பற்றி இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி பிற மதத்தினரும் நன்கு அறிந்தது தான். ஆனால், அந்த ஐந்து கடமைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பவருக்கு என்ன கிடைக்கும், கடைபிடிக்காதவர்களுக்கு என்ன கிடைக்கும், என்பதனை விளக்குவதோடு, சமூக பிரச்சனைகள் பற்றியும் பேசுவது தான் ‘இன்ஷா அல்லாஹ்’.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், கதை நகரும் களமும் மிக இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருப்பது, படத்தின் மீது கவனம் ஈர்க்கிறது.

கவிஞர் விக்ரமாதித்யன், பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலான என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு இசை இல்லை. ஒலியை நேரடியாகவும், மிக நேர்த்தியாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப யணித்திருப்பதோடு, கதைக்களத்தை மிக துள்ளியமாகவும் பதிவு செய்திருக்கிறது.

தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன் ஆகியோரது கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

இஸ்லாம் மதம் சொல்லும் நல்ல விஷயங்களையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களைப் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது மற்றும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்கள் ஆகியவை பற்றி மறைமுகமாக பேசியிருந்தாலும், அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கதை புரியவில்லை, என்பது தான் படத்தின் மிகப்பெரிய குறை என்றாலும், இயக்குநர் வைத்திருக்கும் குறியீடுகள் மூலம் பல விஷயங்களை புரிந்துக்கொள்ளலாம். ஆனால், படத்தை ஒரு முறை பார்த்தால் அந்த குறியீடுகள் புரியாது, பல முறை பார்த்தால் தான் புறியும்.

சினிமாவுக்கு என்று ஒரு திரை மொழி இருக்கிறது. அதன் மூலம் ஒரு விஷயத்தை மிக எளிமையாக சொல்வது தான் சினிமாவின் பலம். அந்த பலமே இல்லாமல் இருப்பது இப்படத்தின் பெரும் பலவீனம்.

Comments are closed.