அனிருத்தை தொடர்ந்து ஸ்ருதியும் – ‘என்னமோ ஏதோ..’

219

பிரபல நடிகர்கள் இப்போது தங்களது படங்களில் பாடுகிறார்களோ இல்லையோ தங்களது நண்பர்கள் நடிக்கும் படங்களில் ஜஸ்ட் லைக் தட் ஒரு பாடலை பாடிக்கொடுத்துவிட்டுப் போகிற வழக்கம் தமிழ்சினிமாவில் ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. இதில் சிம்பு முன்னணியில் இருக்கிறார். இப்போது அந்தப்பட்டியலில் ஸ்ருதிஹாசனும் சேர்ந்திருக்கிறார்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் என்னமோ ஏதோ படத்திற்காக டி.இமான் இசையில் ஷட்டப் யுவர் மவுத் என்ற பாடலை பாடியிருக்கிறார் ஸ்ருதி. மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைலில் அமைந்த இந்தப்படலை தான் முதன்முதலாக பாடியிருப்பதாக அனைவரிடமும் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார் ஸ்ருதி. இந்தப்படத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிபிரசாத் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அல மொதலைந்தி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.