தெனாலிராமனுக்கு‘U’ சான்றிதழ்..!

219

வடிவேலு கதாநாயகனாக நடித்துவரும் ‘தெனாலிராமன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஏப்ரல்-1ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருக்கும் AGS தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல்-11ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே இன்று இந்தப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கொளுத்தும் கோடைகாலத்தில் வெளியாகும் வடிவேலுவின் படம் ரசிகர்களுக்கு நகைச்சுவையில் குளிர்ச்சியை தரும் என்பது உறுதி.

Comments are closed.