த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா – ஜி.வி.பிரகாஷ் அடுத்த அட்டாக்

230


இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இது தெரிந்த கதை..

இந்தப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என அடுத்த அட்டாக்கிற்கு தயாராகி விட்டார் ஜீ.வி.பிரகாஷ். என்னது ஜீ.விக்கு ஜோடியாக த்ரிஷா இல்லைன்னா நயன்தாராவா..? மேட்ச்சே ஆகாதே.. என்றெல்லாம் குழம்பவேண்டாம்.

ஜீ.வி.யின் அடுத்த பட டைட்டில் தான் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’. ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு பேசிய ஃபேமஸ் டயலாக் தான் இது. ரிபெல் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தை ஆதிக் என்பவர் இயக்குகிறார். அப்ப மியூசிக்.. அதுவும் ஜீ.வி.பிரகாஷே தான்.

Leave A Reply

Your email address will not be published.