‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு

216

Vikram-Prabhu

கடந்த சில வருடங்களில் வெளியான மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தமிழரசன் என்பவர் இயக்குகிறார்.

அமேசான் பிரைமின் முதல் தமிழ் வெப் சீரிஸ் ஆக வெளியான வெள்ள ராஜாவுக்கு ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கி தமிழ்நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Comments are closed.