பத்தே நிமிடத்தில் தயாரிப்பாளரை ஓகே சொல்ல வைத்த கதைதான் எல்கேஜி

258

lkg pressmeet

தொகுப்பாளர், காமெடி நடிகர், சமூக ஆர்வலர் என அறியப்பட்டு வந்த ஆர்ஜே பாலாஜி முதன்முறையாக எல்கேஜி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரபுதேவாவின் உதவியாளர் பிரபு என்பவர் இந்த படத்தை இயக்க, ஐசரி கே கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்

ஒரு முறை காரில் செல்லும்போது பேச்சுவாக்கில் ஐசரி கணேஷிடம் இந்த கதையை ஆர்.ஜேபாலாஜி கூறியிருக்கிறார். அப்போது பத்து நிமிடம் கதையை கேட்ட கணேஷ், இந்த படத்தை நான் தயாரிக்கிறேன், ஆக வேண்டிய வேலையை கவனி என கூறி இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

அதன்பிறகு வந்த ஒன்றிரண்டு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்குவதற்கு சரிப்பட்டு வராமல் போகவே, தனது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான இயக்குனர் பிரபுவை, இந்த படத்திற்கு பணிபுரியும்படி ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைத்து விட்டார் தயாரிப்பாளர் கணேஷ்.

படம் முழுவதும் அரசியல் நையாண்டியுடன் உருவாகி இருந்தாலும் எந்த ஒரு கட்சியையும் எந்த ஒரு தனிப்பட்ட அரசியல்வாதியையும் குறிப்பிட்டு தாக்காமல் ஜாலியான நகைச்சுவை உணர்வுடன் காட்சிகளை அமைத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் இந்த படம் அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Comments are closed.