சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அளவில் ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி நூறு மில்லியன் பார்வைகளை கடந்தது.. ‘3’ என்ற திரைப்பட ஆல்பத்தின் பாடலான ஒய் திஸ் கொலவெறி, தமிழ் மற்றும் ஆங்கில மொழியை கலந்து எழுதப்பட்ட பாடல் வரிகளை கொண்டிருந்தது. ஏழாண்டுகளுக்கு முன்னர் 2011 நவம்பர்16ல் சோனி மியூசிக் இந்தியா தளத்தில் வெளியான ஒய் திஸ் கொலைவெறி டி பாடல் 174 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
தனுஷ் எழுதி அநிருத் இசையமைத்து வெளியான இப்பாடல் இந்தியாவை தாண்டி பிற நாடுகளிலும் வைரலானது. இந்திய அளவில் யூட்யூபில் 2011 ஆண்டு பல சாதனைகளை படைத்தது ஒய் திஸ் கொலைவெறி டி பாடல். அந்த வகையில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் தமிழில் வெளியான மாரி-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி பாடல் கடந்த ஜனவரி 2-ம் தேதி யூட்யூபில் வெளியாகி தற்போதைய நிலவரப்படி 105 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது
முன்னதாக நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மெர்சல் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் 90 மில்லியன் பார்வைகளை தாண்டியிருந்தது. தற்போது ‘ரௌடி பேபி’ பாடல் மெர்சல் திரைப்பட பாடலை விட கூடுதல் பார்வைகளை பெற்றுள்ளது.

Comments are closed.