பொங்கலுக்கு வெளியாகிறது கடாரம் கொண்டான் டீசர்..!

258

kadaram kondan

இந்த வருடம் ஸ்கெட்ச், சாமி 2 என இரண்டு படங்களை கொடுத்து விட்டார் சியான் விக்ரம். ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது

இந்நிலையில் தற்போது கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் டீசரை வரும் ஜனவரி-15 பொங்கல் தினத்தன்று வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் கடந்த வருடம் 2018 பொங்கலுக்கு படம் தந்த விக்ரம், வரும் பொங்கலுக்கு அடுத்த படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்

Comments are closed.