இயக்குனர் பாலா டைரக்ஷனில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘வர்மா’. தெலுங்கில் விஜய் தேவர கொண்டா நடிப்பில் அர்ஜுன் ரெட்டி என்கிற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்தான் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
காதலர் தினமான பிப்ரவரி-14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது இந்தநிலையில் இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து கைப்பற்றி உள்ளனர்.

Comments are closed.