2.O பட ரிலீஸை வைத்து அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி…!

232

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவ்காகியுள்ள ‘2.O’ படம் வரும் நவ-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று காலை சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ரஜினிகாந்த் உட்பட கதாநாயகி எமி ஜாக்சன், அக்ஷய்குமார், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில் ரஜினி பேசும்போது, “2.O” படத்தின் அனைத்து பெருமைகளும் இயக்குனர் சங்கரையே சேரும். 2.O படம் மூலம் உலகிற்கே ஒரு நல்ல தகவலை கூறியுள்ளோம். ஷங்கரின் படைப்புத்திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 600 கோடி செலவில் இந்தப்படம் தயாராகியுள்ளது. நிச்சயமாக இந்தப் படம் மக்களுக்கு நல்லதொரு தகவலை கொடுக்கும்.

காலா படப்பிடிப்பிற்குப் பிறகு 2.0 படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத வகையில் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டது. படத்தில் இருந்து பாதியிலேயே விலக முடிவு செய்து ஷங்கரிடம் என்னால் இந்த படத்தை முடித்துக் கொடுக்க முடியாது இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன்

ஆனால் ஷங்கர் நான் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்க முடியாது என்று கூறினார். உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் நான்கு மாதங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

லேட்டாக வந்தாலும் ஹிட் அடிப்பது தான் முக்கியம். தற்போது வந்தாச்சு வெற்றியும் உறுதியாயிடுச்சு இனிமே ஹிட் அடிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி என்று பேசியுள்ளார். ரஜினியின் இந்த வார்த்தையை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் குஷியாக நான் படத்தை சொன்னேன் என்று ஒரு பஞ்ச்சுடன் பேச்சை முடித்தார்.

ரஜினி திரைப்படத்தை சொல்கிறாரா அல்லது தனது அரசியல் வருகையை பற்றி மறைமுகமாக சொல்கிறாரா என்பது புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும் தானே..?.

Comments are closed.