எம்.ஜி.ஆர் கைகொடுப்பார் – விஷால் நம்பிக்கை

230

காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தி சுந்தர்.சி இயக்கியுள்ள படம் ‘எம்.ஜி.ஆர்’. அதாவது ‘மதகஜராஜா’. இந்தப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ரெண்டுபேரும் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படமும் ரிலீஸுக்கு தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது.

ஆனால் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதும் அவர்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு சுந்தர்.சி ‘தீயா வேலை செய்யணும் குமார்’ படத்தை டைரக்ட் செய்து அதையும் ரிலீஸ் செய்துவிட்டார். அதன்பிறகு விஷால் ‘பட்டத்து யானை’யில் நடித்து அதுவும் ரிலீசாகிவிட்டது. பட்டத்து யானையின் சென்னை விநியோக உரிமையை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கியது.

அதனால் மதகஜராஜாவின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கிவிட்டது விஷால் பிலிம் பேக்டரி. படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் இந்தப்படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் விஷால். சுந்த்ர்.சி.யின் டைரக்‌ஷன் நிச்சயம் தனக்கு கைகொடுக்கும் எனபதால் பட வெளியீட்டிற்கான ஏற்பாட்டில் மும்முரமாக இறங்கிவிட்டார் விஷால்.

இந்தப்படத்தில் சந்தானம் காமெடியில் பட்டையை கிளப்பியிருக்காராம். மறைந்த இயக்குனர் மணிவண்ணனும் இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் இடம்பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிற இந்த ‘மதகஜராஜா’ விஷாலுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2 Comments
  1. Emmanuel M says

    Very interesting points you have noted, appreciate it for putting up.Leadership

  2. Gates of Olympus says

    88921 647601I like this internet site so much, saved to favorites . 211275

Leave A Reply

Your email address will not be published.