தமிழ்த்திரைப்பட உலகில் மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ். கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதயக்கோயில், நான் பாடும் பாடல் என வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் தான் ‘உயிருக்கு உயிராக’. சஞ்சீவ், சரண் குமார், நந்தனா, ப்ரீத்தி தாஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இளையதிலகம் பிரபு. கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் விஜய மனோஜ் குமார். ஷாந்தகுமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தை வேந்தர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.