இசக்கி பரத் படத்தை இயக்கும் கோலிசோடா இணை இயக்குனர்..!

201

isakkibharath film

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமுத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் இசக்கி பரத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார். சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Comments are closed.