காதலர்தினத்தில் நயன்தாராவின் டபுள் ட்ரீட்

229

இப்படி யாருக்காவது ஒரு சிலருக்குத்தான் ஆச்சர்யமாக அமையும். அது இப்போது நயன்தாராவுக்கு அமைந்திருக்கிறது. புரியவில்லையா..? உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம் காதலர்தினத்தன்று வெளியாக உள்ளது உங்களுக்கு தெரியும்.

இப்போது அதே நாளில் நயன்தாரா நடித்துள்ள இன்னொரு படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் சேர்த்து ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் ‘அனாமிகா’வும் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ எனவும் தயாராகி உள்ள படம் தான் அது. இந்தியில் வித்யாபாலன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘கஹானி’ படத்தின் ரீமேக் தான் இது.

காணாமல் போன கணவனை தேடி அலையும் கர்ப்பிணிப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். காதலர்தினத்தில் நயன்தாரா நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் இரண்டுமே ரசிகர்களை, அதுவும் குறிப்பாக காதலர்களை தியேட்டர்களுக்கு இழுத்துவந்துவிடும் என்பதில் ஆச்சர்யமில்லை..

Leave A Reply

Your email address will not be published.