பத்து வருடங்களுக்கு முன் சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர் தான் இந்த வித்யாதரன்… இந்த ‘இட்லி’ படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் தான் அந்த பாட்டிகள்.
மற்றபடி படத்தில் பாடல்கள், ஆக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது தான் இட்லி படத்தின் ஸ்பெஷல். இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Comments are closed.