கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மலையாள திரையுலகம் நடத்திய மாபெரும் நட்சத்திர கலைவிழா திருவனந்தபுரம் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து நடிகர் சூர்யா கலந்துகொண்டார். இந்த விழாவில் சூர்யாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, மலையாள நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் சூர்யாவுடன் ஆவலாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.. இந்தநிகழ்வில் மலையாள திரையுலகுடன் தனக்குரிய நட்பை, நெருக்கத்தை பற்றி பேசிய சூர்யா, மலையாள திரையுலக சீனியர் நடிகர்களின் ஓய்வூதிய திட்டத்திற்காக தனது பங்காக ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக அளித்தார். சூர்யாவின் இந்த செயலால் மலையாள திரையுலகம் நெகிழ்ந்து போயுள்ளது.

Comments are closed.