தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உருவான ‘சந்தோஷத்தில் கலவரம்’..!

254

santhoshaththil kalavaram

“ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை மையாக வைத்து உருவாகியுள்ள படம் தான் சந்தோஷத்தில் கலவரம்’. ‘தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்’ என்று டைட்டிலுடன் சேர்த்து டேக் லைனும் போட்டுள்ளார்கள்.

பல விளம்பரப்படங்கள், குறும்படங்களை இபக்கிய, அவற்றுக்காக விருதுகளும் பெற்ற கிராந்தி பிரசாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரக படம் என்றாலும் இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி, ஆன்மிகம் எல்லாம் இதில் கலந்துள்ளன.

நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவிமரியா வித்தியாசமான ரோலிலும் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பவுலியஸ் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் .படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Comments are closed.