உடுமலைப்பேட்டையில் கௌசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டையே உலுக்கிய ஒன்று. தற்போது சங்கர்-கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் விதமாக மாறாத சமூகம்’ என்கிற படம் உருவாக்கி வருகிறது.
அ ஆ இ ஈ திரைப்பட்டறை சார்பில் என்.மணிகண்டன என்பவர் தயாரிக்கும் இந்த “மாறாத சமூகம்” திரைப்படத்திற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனதுய் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் தனது ஆத்மார்த்தமான உதவியையும் செய்துள்ளார். தற்போது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

Comments are closed.