ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.
ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிரூத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது. இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது தான் முதன்முறை.
இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் ஜுன் 17 ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை. அனிரூத் அவர்கள் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

Comments are closed.