தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ஒரு மலையாள படம் ; ஆனால் தமிழில்..!

222

ajith from aruppukottai

ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கமும் தனது பார்வையை திருப்பியுள்ள தனுஷ் ‘தரங்கம்’ மற்றும் ‘மரடோனா’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘தரங்கம்’ படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் மலையாளத்தில் கடந்த 2௦16ல் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்கிற படத்தை தமிழில் ‘அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை’ என்கிற பெயரில் ரீமேக் செய்து தயாரிக்கிறார்.

அங்கே நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை நடிகர் திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார். தமிழிலும் அவரே இயக்கவுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ‘பிராங்க் கால்’ மூலம் பிரபலங்கள் பலரையும் கலாய்க்கும் தீனா என்பவரை இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்.

Comments are closed.