இறுதிக்கட்டத்தை நெருங்கும் ‘தமிழ்படம் 2.O’ படப்பிடிப்பு..!

228

Tamizh Padam 2.O shooting

கடந்த சில வருடங்களுக்கு முன் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘தமிழ்படம் 2.O’ என்கிற படம் உருவாகி வருகிறது.

இந்தப்படத்தையும் சி.எஸ்.அமுதனே இயக்குகிறார். ஆனால் இந்தப்படம் மக்கள் மனதில் பதிந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இமிடேட் செய்து உருவாக இருக்கிறது.. ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திஷா பாண்டேவும் நடிக்கிறார்

அதுமட்டுமல்ல இந்தப்படம் வரும் மே-25ல் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் கொடைக்கானலிலுமாக இன்னும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என இயக்குனர் சி.எஸ்.அமுதன் தகவல் தெரிவித்துள்ளார்..

Comments are closed.